அமெரிக்கா செல்லும் நடிகர் டி.ராஜந்திரன் தற்போதைய நிலை என்ன? வெளியான புகைப்படம்
இன்று சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் பிரபல நடிகர் டி. ராஜேந்திரரை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று சந்தித்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
டி. ராஜேந்தர்
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி ராஜேந்தர் இன்று மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து உடல் நலம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்
பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் இரண்டு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த சிகிச்சையின் போது அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது டி.ராஜேந்தர் நலமுடன் இருப்பதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இன்று அமெரிக்கா செல்கிறார்?
அதேபோல் அவர் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே ஓய்வுக்காக இருந்தார். மேலும் உயர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு அழைத்து செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. அதற்கான வேலைகளிலும் நடிகர் சிம்பு உள்ளிட்ட டி.ராஜேந்திரன் குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் 16ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னையில் இருந்து டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்.
அவருடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இன்று இரவு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு சிகிச்சை முடிந்த பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்த பின் மீண்டும் அவர்கள் சென்னை திரும்புவார்கள் என கூறப்படுகிறது.