இந்த அறிகுறிகள் தெரியுதா ? அப்போ இதய குழாய் பத்திரம்
நமது உடலில் உரு சில அறிகுறிகளை வைத்து நம் உடல் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய முடியும்.
என்ன அறிகுறி
நமது உடலில் மிகவும் முக்கியமான பகுதியில் இதயம் முக்கிய பங்கு வகிக்கின்றது. மற்ற உறுப்புக்கள் முக்கிய இடத்தில் இருந்தாலும் இதயம் நின்றுவிட்டால் நாம் உயிருடனே இருக்க மாட்டோம்.
இதயம் எந்த விதமான தடையும் இல்லாமல் வேலை செய்தால் மட்டுமே நமது உடல் சீராக இருக்கும். இதயம் எவ்வித தடைகளும் இல்லாமல் செயல்பட்டால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் சத்துக்கள் நிறைந்த இரத்தம் கிடைத்து, உறுப்புகள் சரியாக செயற்படும்.

ஆனால் தற்போது இருப்பவர்களின் ஆராக்கியமற்ற வாழ்க்கை மறை மற்றும் சீரா பழக்க வழக்கம் இல்லாததால் இதயத்தில் கொழுப்பு தேங்கி பல நோய்கள் வர ஆரம்பமாகிறது.
இது சாதாரண நோய் அல்ல. பொதுவாக இதயத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து, சிகிச்சை பெற்று வந்தால், நிலைமை மோசமடைவதைத் தடுக்கலாம்.
நமக்கு உடலில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்தால் பல அறிகுறிகளை தந்து நமது உடலில் இருக்கும் நோய்களை காட்டி கொடுக்கும். அதன்படி மனிதனது இதயத்தில் பிரச்சனை இருப்பின், உடலானது ஏராளமான எச்சரிக்கை அறிகுறிகளை நமக்கு தெரியப்படுத்தும். அந்த அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.

இரத்த குழாய் அடைப்பு
நெஞ்சு வலி அல்லது அழுத்தம் - நெஞ்சு பகுதியில் அடிக்கடி வலியையோ, பாரத்தையோ அல்லது அழுத்தத்தையோ தொடர்ந்து வந்துகொண்ட இருந்தால் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் உடற்பயிற்சி செய்யும் போது வலியை சந்தித்து, ஓய்வு எடுத்த பின் வலி மறைந்தால், உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்.
தலைச்சுற்றல் அல்லது மயக்கம் - அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது மயக்கத்தை சந்தித்தால் அதற்கு காரணம் உள்ளது. எப்போது ஒருவரது மூளைக்கு போதுமான இரத்தம் கிடைக்கவில்லையோ, அப்போது தான் தலை சுற்றல் வரும். மூளைக்கு தேவையான அளவு இரத்தம் செல்லாமல் இருந்தால் இரத்த குழாய்களில் உள்ள அடைப்பு தான் காரணம்.

கைகள், கழுத்து அல்லது தாடையில் வலி - நெஞ்சு பகுதியில் வலியை சந்திப்பதோடு, அந்த வலி அப்படியே கைகள், கழுத்து, தாடை போன்ற பகுதிகள் வரை பரவினால், உடனே அதை கவனிக்க வேண்டும். இது பெரும்பாலும் தமனிகளில் அடைப்பு இருந்தால் மட்டுமே நடைபெறும்.
மூச்சுவிடுவதில் சிரமம் - லேசாக ஏதாவது ஒரு சிறு வேலை செய்தாலும் அல்லது ஓய்வு நிலையில் இருக்கும் போதும், மூச்சுவிடுவதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் தமனிகளில் அடைப்பு இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதுவும் இப்படி மூச்சுத்திணறலை சந்திக்கும் போது, சுவாசிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டால் மற்றும் எந்த ஒரு காரணமும் இல்லாமல் இப்படியான பிரச்சனையை சந்தித்தால், இதயத்தில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |