Symptoms of oral cancer: இந்த அறிகுறிகள் இருந்தால் வாய் புற்றுநோய் இருப்பது உறுதி- ஜாக்கிரதை
உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர்.
புற்றுநோய் எனக்கூறும் போது பல காரணங்களாலும் பல வகைகளிலும் ஏற்படுகின்றது. உதாரணமாக, நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை கூறலாம்.
தவறான பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் புற்றுநோயிற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. சிலருக்கு புற்றுநோய் ஆரம்பிக்கும் போதே அறிகுறிகள் தெரியும். ஆனால் இன்னும் சிலருக்கு நோய் முற்றிய பின்னரே தனக்கு புற்றுநோய் இருப்பதே தெரியவரும்.
அப்படி பெரும்பாலானோரை தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று தான் வாய் புற்றுநோய். இதனை ஆங்கிலத்தில் Oral cancer என அழைக்கிறார்கள்.
இந்த வகையான புற்றுநோயானது, வாய் மற்றும் தொண்டைப் பகுதிகளில் உருவாகும். எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும், அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் உயிர் சேதத்தை தடுக்கலாம்.
அந்த வகையில் வாய் புற்றுநோய் இருப்பததை எப்படி அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்? அதற்கான சிகிச்சைகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வாய் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்
1. புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம் ஆகிய பழக்கங்கள் உள்ள ஒருவருக்கு நாளடைவில் வாய் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. அளவு அதிகமாக மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது வாய் புற்றுநோய் அபாயத்தை துண்டுகின்றது. அதிலும், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கட்டுபாட்டில் இருப்பது நல்லது.
2. மோசமான உணவுப் பழக்கம், வெயிலில் அதிகம் சுற்றுவது மற்றும் பாதுகாப்பு இல்லாத வாய்வழி உடலுறவு மூலம் பரவக்கூடிய மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஆகிய காரணங்களால் வாய் புற்றுநோய் வரலாம். இது போன்ற பழக்கங்கள் இருந்தால் அவற்றை முற்றாக அல்லது கட்டுபாட்டில் வைப்பது நல்லது.
3. குறிப்பிட்டதொரு தொழிற்சாலையில் தரமற்ற பொருட்கள், சரியான முறையில் பராமரிக்கப்படாத பொருட்கள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது வாய் புற்றுநோய் வரலாம்.
4. வாய் புற்றுநோய் மரபியல் காரணிகளாலும் வரலாம். அதாவது நமது குடும்பத்தில் எவருக்கேனும் வாய் புற்றுநோய் இருந்தால் அது சந்ததி வழியாக கடத்தப்பட்டு பாதிப்பு உண்டாகலாம்.
வாய் புற்றுநோயின் அறிகுறிகள்
- வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாய், தொண்டை, நாக்கு பகுதிகள் கட்டில் காணப்படும்.
- சிலருக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் வீக்கம் ஏற்படும்.
- வாய் அல்லது கழுத்துப் பகுதிகளில் ஏற்படும் கட்டிகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.
- வாயில் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுக்கள் ஏற்படும்.
- சிலருக்கு வாயில் புண்கள் தோன்றும். இப்படியான புண்கள் வாய் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
- புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புகைக்கும் பக்கம் புண்கள் ஏற்படலாம்.
- வாய் துர்நாற்றம் அதிகமாக இருக்கும்.
- உங்களால் உணவு, நீர் ஆகியவற்றை விழுங்க முடியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
- தொண்டையில் சில அசௌகரியமாக இருந்தால் அது நாளடைவில் அதிகரிப்பது போன்று தோன்றினால் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
- திடீரென்று காரணமின்றி நாக்கு அல்லது வாயின் ஏதேனும் ஒரு பகுதி மரத்துப் போவதை உணர்ந்தால் அதுவும் வாய் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
- தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்றும் உணர்ந்தால் மருத்துவரை பார்ப்பது சிறந்தது. காரணமின்றி ஒன்றிற்கு மேற்பட்ட பற்கள் வலுவிழந்து ஆட்டம் காட்டுவதோடு, விழவும் செய்யும்.
- வாய் புற்றுநோய் புண்கள் வழியாக தான் வெளியில் தெரிய வரும். திடீரென நாக்கு, ஈறுகள் அல்லது வாயின் உட்புற படலத்தில் கொப்புளங்கள் தோன்றும்.
மருத்துவர் அனுகல்
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேல் இருந்தால் எந்தவித தயக்கமும் இன்றி மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று வந்தால், முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. வாய் புற்றுநோய் இருப்பது போன்று தெரிந்தால் மருத்துவரின் பரிந்துரைக்கமைய பரிசோதனைகளை செய்து கொள்ளலாம்.
வாய் புற்றுநோய் பற்றிய தவறான கருத்துக்கள்
1. புகையிலை பாவனையை தவிர்த்து மது மாத்திரம் உட்க்கொண்டால் வாய் புற்றுநோய் ஏற்படும் என்பது தவறான கருத்து. புற்றுநோயின் பாதிப்பு இவை இரண்டினாலும் தான் ஏற்படுகின்றது. மாறாக மேற்குறிப்பிட்ட முறையில் மேற்க் கொள்ளும் பொழுது பாதிப்பு குறைவாக இருக்கும்.
2. வழக்கமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலி இருக்கும் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய் மற்றும் தொண்டை பகுதியில் வலி கண்டிப்பாக இருக்கும். வாயில் ஆறாத புண்கள், கட்டிகள் அல்லது உணர்வில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் வலியை கொடுக்கும்.
3. தொடர்ச்சியான புண்கள் அல்லது கட்டிகள் ஆகியன மட்டுமே வெளியில் தெரியும் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது. மற்றவைகள் அனைத்தும் உணர்திறனில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது விழுங்குவதில் சிரமம் ஆகியனவாகும். வெளியில் தெரியும் வகையில் பெரும்பான்மையினருக்கு இருக்காது. பரிசோதனைகள் மூலம் தான் கண்டறியலாம்.
4. வாய் புற்றுநோய் என்பது ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் பொதுவானதாகும். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகம் தாக்க வாய்புள்ளது. ஏனெனின் ஆண்கள் தான் குடிப்பழக்கம், புகைத்தல் ஆகிய தீயச்செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
5. அதிகப்படியான மது அருந்துவது வாய் புற்றுநோயின் முக்கிய காரணியாக இருந்தாலும், கொஞ்சமாக மது அருந்தலாம் என்று அவசியம் இல்லை. புகையிலை மற்றும் மது இரண்டையும் பயன்படுத்தும் நபர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளது.
வாய் புற்றுநோயாளர்களின் உணவு பழக்கங்கள்
1. பகலில் சிறிய இடைவெளியில் இலகுவாக சாப்பிடக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும். உணவை ஆறு முதல் எட்டு முறை பிரித்து அதிக கலோரிக் மதிப்புள்ள உணவுகளை உண்ணலாம்.
2. வெண்ணெய், ஆலிவ் அல்லது கனோலா எண்ணெயில் செய்யப்பட்ட முட்டை போன்ற உணவுகளை அதிகமாக உணவுடன் சேர்த்து கொள்ளலாம்.
3. உணவுகள் சாப்பிட முடியாது என்றால் ஸ்மூத்திகளை முயற்சி செய்யலாம், ஏனெனில் அவை புரதங்கள் நிறைந்தவை மற்றும் உங்களுக்குத் தேவையான கலோரிகளை ஒரே தடவையில் வழங்கும்.
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தர்பூசணி, கேரட் போன்ற வண்ணமயமான பழங்களையும் சாப்பிடலாம். காய்கறிகள் மற்றும் பழங்களில் நமக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக இருக்கும்.
5. வாய் புண்கள் இருக்கும் பொழுது கரடுமுரடான உணவுகளை விழுங்குவதில் சிரமம் ஏற்படும். அந்த சமயத்தில் சூப்கள், மசித்த உணவுகள் மற்றும் ப்யூரிகளை சாப்பிடலாம்.
6. ஸ்மூத்தியை மெல்லிய நிலைத்தன்மையுடன் தயாரிக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அமிலமற்ற பழச்சாறுகளை குடிப்பது சிறந்தது.
7. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உணவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்து கொள்வது அவசியம். ஏனெனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் செல்களை எதிர்த்து போராடும்.
8. வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி மூலம் ஏற்படும் மோசமான விளைவுகளை எதிர்த்து போராடி விளைவுகளை குறைக்கும்.
9. கீமோதெரபி சிகிச்சை பெற்றவர்கள் அதிகளவான தண்ணீர் குடிப்பது நல்லது. வாய் புற்றுநோய் தடுக்கும் உணவுகளில் நீரும் ஒன்று. தண்ணீர், தண்ணீர், சூப்கள், பால், தேநீர் போன்றவற்றை அடிக்கடி எடுத்து கொள்ளலாம். ( 1 நாள்- 8-10 கிளாஸ் திரவ உணவுகள்)
10. புதிய பழங்கள், தயிர் பால், புரோட்டீன் பவுடர், பழச்சாறு உள்ளிட்டவை எடுத்து கொள்வதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும்.
11. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை சாப்பிடுவது வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தது. ஏனெனின் மீனில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |