மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை

By Vinoja Jan 31, 2024 06:24 AM GMT
Report

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் முக்கிய இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

அந்தவகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது. மாரடைப்பு தற்போது மிகவும் சாதரணமாகிவிட்டது.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

அதே நேரத்தில் மாரடைப்பு குறித்த சரியான புரிதல்களோ அல்லது, உடனடியாக கொடுக்க வேண்டிய முதலுதவி குறித்தோ நம்மில் பலருக்கும் சரியான புரிதல் இருப்பதில்லை. மார்பில் வலி ஏற்பட்டாலோ  அது மாரடைப்பு தான் என்று அனேகமானோர் நினைத்துக்கொள்கின்றனர். 

பொதுவாக மாரடைப்பு எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும். இது எந்த நேரத்திலும் ஏற்படலாம் என்பது தொடர்பில் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது அவசியம். 

மாரடைப்பு கடந்த சில ஆண்டுகளில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் ஆகியன இதற்கு பிரதான காரணங்களாக திகழ்கின்றது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து, சரியான உணவை தவறாமல் உட்கொண்டால், மாரடைப்பு என்ற ஆபத்தை பெருமளவு குறைக்க முடியும்.

இருப்பினும் மாரடைப்பின் முதற்கட்ட அறிகுறிகள் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

மாரடைப்பின் பிரதான அறிகுறிகள்

மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிப்பதே நிலைமையை மோசமாக்குகிறது.மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகள் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமல்லாது பெரும்பாலும் மீண்டும் மீண்டும் உணரப்படுகின்றது.

அந்த மோசமான நிலை வருவதற்கு முன்னதாக உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருந்தால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே, நீண்ட காலமாக சோர்வை உணர்ந்தால் அதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

தொடர்ந்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டால், அது இதயம் தொடர்பான நோய்களால் ஏற்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நீண்ட காலமாக இந்த பிரச்சனைகள் இருந்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது சுவாசம் தொடர்பான வேறு ஏதேனும் அறிகுறிகள் மீண்டும் மீண்டும் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், அது நரம்புகள், தசைகள் அல்லது எலும்புகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

ஆனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலி ஏற்படுவது இதயம் தொடர்பான சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.

உடலின் இடது பகுதியில், குறிப்பாக மார்பு, கழுத்து, தாடை அல்லது முகத்தின் இடது பக்கம் அல்லது இடது கையில் வலி இருந்தால், இந்த அறிகுறிகள் மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்புக்கு முன், தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி போன்ற அறிகுறிகள் சிலருக்கு ஏற்படும். குறிப்பாக இந்த அறிகுறிகள் தொடர்ந்து உணரப்பட்டால், இதய பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

நெஞ்சு வலி என்பது மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் உட்பட பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக அடிக்கடி நெஞ்சு வலி அல்லது மரத்துப்போனால் மருத்துவரை அணுகவும்.

ஏனென்றால், இந்த அறிகுறிகள் இதயம் தொடர்பான நோய்களின் பிரதான அறிகுறிகளாக காணப்படுகின்றன.

மார்பில் என்ன வலி ஏற்பட்டாலும் அது என்ன மாதிரியான வலி எதனால் ஏற்பட்டது என்பதை மருத்துவரைச் சந்தித்து உறுதி செய்து கொள்ளல் அவசியம்.

மாரடைப்பை எச்சரிக்கும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? இந்த அறிகுறிகள் இருந்தா ஜாக்கிரதை | Symptoms Of Heart Attack

சில அறிகுறிகளை வைத்து மட்டும் நீங்களே எதையும் உறுதி செய்து கொள்ள முடியாது. உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை எனில் அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்பதால் மருத்துவ ஆலோசனை பெறுவதில் தயக்கம் வேண்டாம்.வந்த பின் துன்பமடைவதை விட அதனை வராமல் தடுப்பது தான் மிகவும் புத்திசாலித்தனமானது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US