சர்க்கரைவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!
கிழங்கு வகைகளில் பல வகை உண்டு. அதிலும் குறிப்பாக சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பல நன்மைகள் அடங்கியுள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உண்பதால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற வழிவகை செய்கிறது.
இரத்த அணுக்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதயநோய் பாதுகாப்பிலிருந்து காக்கிறது. அதேபோல் இதயநோய் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது.
நல்ல மனநிலை, வலுவான எலும்புகள், இதயம் என்பவற்றுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதிலிருக்கும் விட்டமின் ஏ சிறந்த ஒட்சிசனேற்றியாக செயல்படுகிறது.
இது புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் பெற்றது. பழுதடைந்த செல்களை சரி செய்வதிலும் புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் இந்த கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கை சுட்டோ, வேக வைத்தோ, சிப்ஸ் செய்தோ சாப்பிடலாம்.
வெள்ளை மற்றும் இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.