நாவூரும் சுவையில் சுட்ட கத்தரிக்காய் கடையல்... வெறும் பத்தே நிமிடம் போதும்!
பொதுவாகவே எல்லா பருவங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ளக் கூடிய கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து செறிந்து காணப்படுகின்றது.
கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் ஆற்றலும் கத்தரிக்காய்க்கு உண்டு.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த கத்தரிக்காயை கொண்டு சுட்ட கத்தரிக்காய் கடையல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 6
பூண்டு- 20 பல்
காய்ந்த மிளகாய்- 4
தக்காளி -1
உப்பு - தேவையான அளவு
புளி- ஒரு எலுமிச்சை அளவு (கரைத்தது)
வெங்காயம்- (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி- (பொடியாக நறுக்கியது)
செய்முறை

முதலில் கத்தரிக்காய், பூண்டு,காய்ந்த மிளகாய், தக்காளி ஆகியவற்றை நேரடியாக நெருப்பில் சுட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு இடிகல் அல்லது மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சுட்ட காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் சுட்ட கத்தரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன், புளி கரைசல், மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் கத்தரிக்காய் கடையல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |