தூங்கிக் கொண்டிருந்த மனைவி! நள்ளிரவில் கணவர் செய்த கொடூரம்
சென்னையில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி மீது சந்தேகம்
தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், மகேஸ்வரி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் வரப்பிரகாசம் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி விசுவாசமேரி (50). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
விசுவாசமேரி அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் நிலையில், தினமும் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி கணவர் சண்டை போட்டுள்ளார்.
அரிவாளால் வெட்டி கொலை
நேற்று முன்தினம் இரவு முழுவதும் இருவரும் சண்டையிட்டு பின்பு தூங்கச் சென்றுள்ளனர். மனைவி மீதான ஆத்திரத்தில் தூங்காத இருந்த வரபிரசாதம், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த விசுவாச மேரியை அரிவாளால் தலை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வௌத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்பு போர்வையால் உடலை மூடி வைத்துவிட்டு வீட்டை வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு கணவர் எஸ்கேப் ஆகியுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வேலைக்கு செல்லும் தாய் வீட்டை விட்டு வெளியே வராததால் அவரை எழுப்புவதற்காக மகள் ஆனந்தி (28) வந்துள்ளார்.
அப்போது, வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விசுவாசமேரியை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டதுடன், அக்கம் பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.