சர்வைவர் நிகழ்ச்சியில் கடலில் சிக்கி கதறிய போட்டியாளர்.... வெளியான பரபரப்பு ப்ரோமோ!
ஜூ தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முதல் சர்வைவர் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதில், பெசன்ட் ரவி, லக்கி நாராயண், அம்ஜத் கான், விஜே பார்வதி, லக்ஷ்மி ப்ரியா, லேடி கேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, காயத்ரி ரெட்டி, உமாபதி ராமையா, விக்ராந்த், விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா, சரண், நந்தா, ராம். சி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டிருக்கின்றனர்.
இதனையடுத்து, முதல் நாள் நிகழ்ச்சியில் விதிமுறைகளை பற்றி ஆக்ஷன் கிங் அர்ஜூன் விலக்கி இருந்தார். மேலும் முதல் நாளிலேயே போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காடர்கள் மற்றும் வேடர்கள் என இரண்டு டீம்களுக்கும் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
தற்போது முதல் போட்டி என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய எபிசொடுக்கான ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.
அதில், இரண்டு அணிகளும் கடலுக்கு நடுவில் நிறுத்தப்பட்டு இருக்கும் படகிற்கு சென்று அங்கு இருக்கும் காய்கறிகளை கொண்டு வர வேண்டும்.
அப்போது விக்ராந்த் திணறி கடலில் தத்தளித்த காட்சி ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறது. முதல் போட்டியே இவ்வளவு கஷ்டமானதாக இருக்கிறதே என ஷோ ரசிகர்களே கமெண்டில் கூறி வருகின்றனர்.
முதல்லயே கடல்-ah ? Right-uh, நிஜமாவே இங்க உழைச்சா தான் பொழைக்க முடியும் போல.#SurvivorTamil #Survivor #ZeeTamil #ActionKingArjun @akarjunofficial pic.twitter.com/8p9iauOHbh
— Zee Tamil (@ZeeTamil) September 13, 2021