தர்பூசணி விதையில் இத்தனை நன்மைகள் இருக்கா? இனிமேல் தூக்கியெறியாதீர்கள்...
பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டால் தர்பூசணியின் வருகையும் கூடவே ஆரம்பித்துவிடும்.
தர்பூசணியானது அதிகளவான நீர்ச்சத்து கொண்டிருப்பதால் உடலை போதுமான அளவு நீர்சத்துடன் வைத்திருக்கும்.
மேலும், தர்பூசணியில் அதிக வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது.
கோடை காலத்தில் உடல் வெப்பத்தை தணிக்கவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் இது மிகவும் துணைப்புரிகின்றது.
ஆனால் தர்பூசனியின் நன்மைகள் குறித்து தெரிந்த பலருக்கும் அதன் விதைகளில் இருக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து தெரிந்திருக்க வாய்பில்லை.
தர்பூசணி விதைகளில் இருக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தர்பூசணி விதையின் நன்மைகள்
தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு.எனவே அது அதிக உடல் எடையை குறைக்கவும் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
அதேசமயம் உடலுக்குத் தேவையான காப்பர், ஸிங்க், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு போன்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த விதைகளில் செறிந்து காணப்படுகின்றது.
இந்த விதைகளில் மெக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க பெரிதும் உதவகின்றது.
மேலும் எலும்புகளை உறுதியாக்குவதுடன் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் சீராக்குகிறது. மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.
உடவில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பாதுகாக்கவும் துணைப்புரிகின்றது.
தலைமுடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். தர்பூசணி விதை எண்ணெய் விற்கப்படுகிறது. அதை சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம். அதை தலையின் வேர்களில் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் கூந்தல் உதிர்வும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
தர்பூசணி விதைகளை வெயிலில் காய வைத்து வறுத்து சாப்பிடலாம் தர்பூசனி விதைகளில் பர்பி செய்த சாப்பிடலாம்.
வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம். அல்லது இதனை வறுத்து அரைத்து பொடியாக்கி சமையலில் பயன்படுத்துவதும் உடல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |