வெறும் 2 கிராம்பு மட்டும் போதும்: பல அதிசயங்கள் நிகழும்
வாசனை பொருட்களில் ஒன்றாக இருக்கும் கிராம்பில பல நன்மைகள் இருக்கின்றது.
பூச்சி விரட்டியாக செயல்படும் கிராம்பினை, அலமாரிகள் போன்றவற்றில், காட்டன் துணியில் கட்டி போட்டுவிட்டால் பூச்சிகளின் தொந்தரவு இருக்காது.
கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து சீரண சக்தியை தூண்டுகிறது. வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது.
கிராம்பு (Clove) பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. அதிலும் காலரா பாக்டீரியாவிற்கு எதிராக செயல்பட்டு அதன் விளைவை குறைக்கிறது.
கிராம்பில் உள்ள கூட்டுப்பொருளான பினைல்புரப்போனைடு பொருட்கள் ஆன்டி மியூட்டோஜெனிக் தன்மையை கொண்டுள்ளன. இது செல்களின் மரபணு பிறழ்வுகளை தடுத்து கேன்சர் செல்கள் (Cancer) உருவாகுவதை தடுக்கிறது.
நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.
உணவில் கிராம்பை சேர்த்து கொண்டு வந்தால் டைப் 1 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஏனெனில் கிராம்பில் உள்ள பொருட்கள் இன்சுலினை தூண்டி இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் அதிகம் எதிர்ப்பு சக்தியை கொடுப்பவை. உங்கள் உடலை நோய்க் கிருமிகளிலிருந்து பாதுகாப்பது இவர்களுடைய முக்கிய வேலையாகும்.
பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவராக விளங்குகிறது.
தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்.