சஞ்சய்க்கு சூர்யா சொன்ன வாழ்த்து… பதிலுக்கு சஞ்சய் சொன்ன வார்த்தைகள் வைரல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தனது திரைப்பயணத்தின் உச்சத்தை தொட்டுவிட்டு, தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று தற்போது முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சஞ்சய்க்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா
படம் வெளியாகும் முன்னதாக, ஜேசன் சஞ்சய்க்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். X தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்.. சஞ்சய் இப்போது ஒரு இயக்குனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாளை மிகப்பெரிய நாள். வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

சூர்யாவுக்கு சஞ்சயின் நெகிழ்ச்சியான பதில்!
சூர்யாவின் வாழ்த்துக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், “ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொன்னதற்காக நன்றி சார். இது எனக்கு இன்னும் பலம் மற்றும் உத்வேகத்தை அளிக்கிறது. ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்க வைக்கிறது. லவ் யூ சார்” என பதிவிட்டுள்ளார்.
சூர்யா–ஜேசன் சஞ்சய் இடையேயான இந்த அன்பான உரையாடல் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
Thank you so much for your incredibly encouraging words, sir. They truly mean a lot to me and give me even more strength and motivation to push myself and do better with every opportunity. It means more than I can express. Love you, sir. ❤️
— Jason Sanjay Official (@official_jsj) October 1, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |