நடிகர் சூர்யாவா இது...? புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
குண்டான நடிகர் சூர்யாவின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ உட்பட படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2020ம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் வென்றது.
குண்டான சூர்யா
தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை திஷா பட்டானி நடித்து வருகிறார். இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் குடும்பத்தினருடன் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா உள்ளனர்.
வைரலாகும் இந்தப் புகைப்படத்தில் நடிகர் சூர்யா உடல் எடையை அதிகரித்து தாடியுடன் காணப்படுகிறார். தற்போது இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன சூர்யாவா இது.. இப்படி குண்டாகிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Family time in #Kodaikanal between the shoot of #Kanguva. My heartfelt gratitude to #Suriya Sir and #Jyothika Madam for the warm welcome. It was truly a memorable and joyous occasion! ❤️ @Suriya_offl pic.twitter.com/HJnvp7IFxn
— Supreme Sundar (@supremesundar) May 10, 2023