அம்பானி வீட்டு திருமணத்தில் ஜோதிகாவின் புடவையை சரி செய்த சூர்யா... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ள நிலையில், குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூர்யா மற்றும் ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக வலம்வரும் சூர்யா ஜோடி, தற்போது அம்பானி வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா தற்போது சினிமாவில் கலக்கி வருகின்றார்.
தற்போது குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆன ஜோதிகாவைக் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அதாவது குடும்பத்தில் மாமனாருடன் பிரச்சினை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு ஜோடியாக வந்துள்ளனர். பட்டு வேட்டி சட்டை மற்றும் சேலையுடன் பாரம்பரிய உடையில் இந்த ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்றது, இவர்களின் உடையலங்காரம் மிகப்பெரிய அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. தன்னுடைய புடவைக்கு மேட்சிங் ஆன அணிகலன்களை ஜோதிகா அணிந்திருந்தது அனைவரின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.
சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து போட்டோசூட் செய்துள்ளதை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |