நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை
நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தங்களுக்கு கொடுக்கப்படும் Pocket-Money-யை தனது தந்தையின் அகரம் பவுண்டேஷனுக்கு கொடுப்பதாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா, ஜோதிகா ஜோடி
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர ஜோடியாக வலம் சூர்யா, ஜோடி தம்பதியினர், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்கையில் காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் தற்போது அப்பா சூர்யாவையே தாண்டி வளர்ந்து நிற்கின்றனர்.
சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்த போது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தினை அவதானித்த நிலையில், இந்த நட்சத்திர தம்பதிகளின் குழந்தைகள் தங்களுக்கு கொடுக்கப்படும் Pocket-Money-யை என்ன செய்கின்றனர் என்பதை அவரது சித்தப்பாவும், நடிகருமான கார்த்தி தெரிவித்துள்ளார்.

Siragadikka Aasai: அம்மா பரிமாறிய உணவு... தந்தையிடம் கூறி கண்கலங்கிய முத்து! உணர்வுப்பூர்வமான ப்ரொமோ
அகரம் பவுண்டேஷன்
சூர்யா நடத்திவரும் அகரம் பவுண்டேஷன் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இதனை விழாவாக நடத்தினர்.
இதில் அறக்கட்டளையின் நிறுவனரான சூர்யா மற்றும் உழவன் அறக்கட்டளை நிறுவனரான நடிகர் கார்த்தி கலந்து கொண்டனர்.
மேலும் சூர்யாவின் குழந்தைகள் மற்றும் மனைவி ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். இதில் நடிகர் கார்த்தி பேசுகையில், அகரம் கட்டளைக்கு பண உதவி வேண்டுமே என்று வருத்தத்துடன் காணப்படும் போது தனது அண்ணி பணத்தை வைத்தா இதனை ஆரம்பித்தோம்... அன்பை வைத்து தானே என்று கூறி ஊக்கப்படுத்துவதை மேடையில் கூறியிருந்தார்.
மேலும் தனது அண்ணன் சூர்யாவின் குழந்தைகள் தங்களுக்கு கொடுக்கும் பாக்கெட்மணியை அகரம் அமைப்பின் 300 என்ற திட்டத்திற்கு கொடுத்து வருகின்றார்களாம்.
இதனையும் நடிகர் கார்த்தி மேடையில் கூறியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் சூர்யாவின் குழந்தைகளான தியா, தேவ்வை பாராட்டி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |