கல்யாண வீட்டு பாணியில் வைட்டமின் சி நிறைந்த சுரக்காய் அல்வா! ரெசிபி இதோ
கல்யாண வீட்டு சாப்பாடு என்றால் அதன் சுவையை சொல்லவே வேண்டிய அவசியம் இல்லை. அறுசுவையும் அதில் நிறைந்திருக்கும். கல்யாண வீட்டில் முதலில் வைக்கப்படுவது இனிப்பு பண்டங்கள் தான்.
இவை சாப்பிடுவதற்கு வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் கல்யாண வீட்டு சுவையில் சுரக்காய் அல்வா எப்படி செய்லாம் என்பதை இந்த பதிவில் பார்க்லாம்.
தேவையானப் பொருட்கள்
- 750 கிராம் சுரைக்காய்
- (தோல் நீக்கி விதை நீக்கியது) - 1.5 லிட்டர்
- முழு கொழுப்புள்ள பால் - கால் கப்
- நெய் - 1/3 கப்
- பாதாம், முந்திரி மற்றும் திராட்சை - ஒன்றரை கப்
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- பச்சை நிற புட் கலர் - 2 தே
செய்முறை
சுரைக்காயை தோல் சீவி அதை விதைகளை நீக்கி விட்டு தனியாக துருவி வைத்துக் கொள்ளவும். துருவிய சுரைக்காயில் இருந்து தண்ணீரை முழுமையாக பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடி கனமான பாத்திரத்தில் 1.5 லிட்டர் முழு கொழுப்புள்ள பாலை கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக கொதித்து 500 மில்லியாகக் குறையும் வரை அதை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
இந்த கெட்டியான பாலை தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கால் கப் நெய்யை சூடாக்கவும். பின்னர் அதில் நறுக்கிய பாதாம், முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்க்கவும்.
இது பொன்னிறமாக மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர் அவற்றை எடுத்து தனியாக வைக்கவும் பின்னர் அதே பாத்திரத்தில், பிழிந்து வைத்திருக்கும் சுரைக்காயைச் சேர்க்கவும்.
அவ்வப்போது கிளறி, அனைத்து ஈரப்பதமும் ஆவியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும். சுரைக்காய் நன்கு குலைந்து வந்ததும் அதில் ஒன்றரை கப் சர்க்கரையை சேர்க்கவும்.
இதை நன்கு கலந்து, 10 நிமிடங்கள் மிதமான தீயில், கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் கொதிக்கவைக்கப்பட் பாலை ஹல்வா கலவையில் ஊற்றவும்.
நன்கு கிளறி, 5-7 நிமிடங்கள் மிதமான தீயில், அல்வா பாலை உறிஞ்சி ஒரு நிலைத்தன்மையை அடையும் வரை தொடர்ந்து கிளறவும். நீங்கள் விரும்பினால் பச்சை நிற புட் கலரை சேர்த்து கிளறவும்.
இது முழுக்க முழுக்க உங்களின் விருப்பம் சார்ந்தது மட்டுமே. பின்னர் வறுத்த பாதாம், முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து அல்வாவை அடிபிடிக்கமால் நன்கு கிளறவும்.
இறுதியாக 2 ஸ்பூன் நெய்யை சேர்க்கவும். சூடான, சுவையான சுரைக்காய் அல்வா ரெடி. இதை மிதமான சூட்டில் சாப்பிட பரிமாறவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |