Super Singer 10: யாழ்ப்பாண குயிலின் ஒற்றை ஆசை... அடுத்த நொடியே நிறைவேற்றிய நடுவர்கள்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரியங்ஹாவின் ஆசையை நடுவர் மனோ உடனே நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
இவர்களுக்கான குரல் தேடல் சில வாரங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மழலையின் குரல் தற்போது நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். பிரியங்ஹா என்ற இந்த சிறுமி மலைக்கோவில் வாசலிலே என்ற ரஜினி பட பாடலை பாடி அசத்தியுள்ளார்.
குறித்த பாடலை பாடிய பின்பு மனோ சாருடன் இந்த பாடலை ஆசைப்படுவதாக நடுவர்களிடம் கூறியுள்ளார். உடனே பிரியங்ஹாவின் ஆசையை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |