Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் இலங்கை குயிலான பிரியங்ஹாவிற்கு ஆளுநர் அனுப்பிய கடிதம் கண்ணீரை வரவழைத்துள்ளது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பல சிறுவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.
பிரியங்ஹா என்ற இந்த சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் படிப்பிற்கு கூட ஒருவர் உதவி செய்து தான் படிப்பதாக அவரது தந்தை அரங்கத்தில் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பிரியங்ஹா பாடல் ஒன்றினை பாடியுள்ள நிலையில், இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதனை அரங்கத்தில் மாகாபா கூறியுள்ள நிலையில், ஆளுநரின் பேச்சைக் கேட்ட பிரியங்ஹா அரங்கத்தில் கண்ணீர் சிந்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |