ஆல்யா பட் லுக்கை ரீகிரியேட் செய்த சிவாங்கி... குவியும் லைக்குகள்
சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி பிரபல நடிகை ஆல்யா பட் போல் தனது லுக்கை ரீகிரியேட் செய்துள்ளார். குறித்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் சிவாங்கி.

இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் வாய்ப்புகளை செல்வாக்கை பயன்படுத்தி எளிமையாக பெறாமல் திறமையை நிரூபித்து பெற்றவர்களுள் இவரும் ஒருவர்.

பாடகியாக அறிமுகமாகிய சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டாக்டர் திரைப்படத்தில் சிவாங்கி ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் அறிமுகமானார்.
தற்போது, தற்போது மேடை நிகழ்சிகளில் அதிகம் பங்கேற்று வரும் சிவாங்கி COMPOSER ஆகவும் களமிறங்கியுள்ளார் அவரே COMPOS செய்து பாடி, நடித்துள்ள ஆல்பம் பாடல் வெளியாகி தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், சிவாங்கி ஆல்யா பட் போல் தனது லுக்கை ரீகிரியேட் செய்துள்ளார். குறித்த காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |