சூப்பர் சிங்கர் பிரபலங்கள் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள்
Sam Vishal and Srinisha Jayaseelan's Engagement Photos : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர்.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சாம் விஷால் – ஸ்ரீநிஷா
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்.
தற்போது இருவரும் தங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள நிலையில், அவர்களது நிச்சயதார்த்தச் செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காதல் ஜோடியாக வலம் வந்த இருவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்களது பாடல் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த சாம் விஷால் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன், தொடர்ந்து இசைத்துறையிலும் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.
இருவரும் நீண்ட காலம் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமண வாழ்க்கையை நோக்கிய அடுத்த கட்டத்தை எட்டியுள்ளனர்.

இருவருக்கும் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நெருக்கமானவர்கள் மட்டும் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டு இருக்கின்றனர். புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |