காதலை உறுதிச் செய்த சூப்பர் சீங்கர் பிரகதி- நிழலில் இருப்பவர் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி குருபிரசாத் தனது காதலரின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, காதலிப்பதை உறுதிச் செய்துள்ளார்.
பாடகி பிரகதி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரபலங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் பிரகதி.
இவர், கடந்த 2012-ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தமிழகம் சார்பில் கலந்து கொண்டாலும் இவர், குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகியவர்.
ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பிரகதி, தற்போது பின்னணி பாடகியாக பாடி வருகிறார். ஆல்பம் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்திய பிரகதி கடந்த சில நாட்களாவே சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார்.
காதலர் யார் தெரியுமா?
இந்த நிலையில், பிரகதி ஒரு பாடகி மட்டுமல்ல பரதேசி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். மீண்டும் பாலா இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கப்பதாக கூறினார். ஆனால் அது சில காரணங்களால் மறுக்கப்பட்டது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், பிரகதி நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியது. ஆனால் அவர் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டு ஒரு பக்கம் சென்று விட்டார்.
இப்படி பல சமயங்களில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளான பாடகி, தற்போர் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
காதலர் தோளில் கை போட்டபடி இருக்கும் ரொமான்டிக் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர், தொகுப்பாளரும் பாடகருமான ஷாம் விஷால் போல் இருக்கிறது என இணையவாசிகள் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஷாம் விஷால் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |