Super Singer Junior: சர்வேஷ் குரலால் நெகிழ்ச்சியில் அரங்கம்... கிடைத்த பரிசைப் பாருங்க
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தும் நிலையில், பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த வார சுற்று தத்துவ பாடல்கள் சுற்று நடைபெற்றுள்ளது. இதில் சர்வேஷ் மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் என்ற பாடலை பாடி கோல்டன் ஷவரை பெற்றுள்ளார்.
சர்வேஷின் குரலைக் கேட்டு சிறப்பு விருந்தினராக வந்துள்ள பிரபல நடிகர் சர்வேஷை புகழ்ந்து பேசியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |