Super Singer Junior: சூப்பர் சிங்கர் மேடையில் குழந்தைகளின் குரலில் இயக்குனர் இமயம் பாரதிராஜா
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தி வரும் நிலையில், பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் சர்வேஷ் பாரதிராஜா படத்தில் உள்ள அடி ஆத்தாடி என்ற பாடலை பாடி நடுவர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
அதே போன்று டார்ஜிலிங்கை சேர்ந்த சிறுமி கருத்த மச்சான் என்ற பாடலைப் பாடி அரங்கத்தையே ஆட்டம் போட வைத்துள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் அவரது சிஷ்யர் பாக்கியராஜ் மறைவு மக்கள் மத்தியில் இன்னும் ஆறாத துயராக இருந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |