Super Singer Junior: பார்வையற்ற சிறுவனின் கம்பீர குரல்... நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்
பிரபல ரிவியில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 11வது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் நடைபெறும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் சீசன் 11 முடிவடைந்த நிலையில், தற்போது ஜுனியர் சீசன் 11 ஆரம்பமாகி உள்ளது.

சிறு குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி அசத்தும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஆர்யன், டார்ஜிலிங்கை சேர்ந்த சவுராபி மற்றும் பார்வை குறைபாடு உள்ள சிறுவன் சர்வேஷ் இவர்கள் பாடும் பாடல்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது.
தற்போது சர்வேஷ் மற்றும் சிறுமி தீபா வர்ஷனா இருவரும் சேர்ந்து வெட்டி வேரு வாசம்... என்ற பாடலை பாடி நடுவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
இருவரின் திறமைக்காக நடுவர்கள் சேர்ந்து கோல்டன் ஷவரை அளித்துள்ளனர். ஏற்கனவே சர்வேஷிற்கு இசையமைப்பாளர் இமான் கீ போர்டு ஒன்றினை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |