Super Singer மேடையை அலங்கரித்த சிறுமிக்கும் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு- கண்ணீருடன் வாங்கிய தருணம்
Super Singer மேடையை தன்னுடைய திறமையால் அலங்கரித்த சிறுமிக்கும் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு மற்றும் அதனை கண்ணீருடன் வாங்கிய தருணம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
Super Singer நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன்படி, சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொண்டு தங்களின் திறமையால் நடுவர்களிடம் பரிசுகளை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் கொடுத்த பரிசு
இந்த நிலையில், இந்த சீசனில் மாற்றுதிறனாளியாக இருந்த சிறுமியொருவரும் கலந்து கொண்டு நெப்போலியனின் ஆதரவை பெற்று பங்கேற்று வருகிறார்.
எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்று ஆகிய இரண்டு கிழமைகளின் எபிசோட்களில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக அவர் நடித்த படங்களில் உள்ள பாடல்கள் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளன.
அதில் பாடி அசத்திய சிறுமியொருவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கையொப்பம் இட்ட கிட்டார் இமான் கையால் பரிசாக கொடுக்கபட்டுள்ளது.
இந்த பரிசை வாங்கிய சிறுமி கண்ணீருடன் மேடைக்கு வந்த காட்சி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |