பிரபல பாடகர் பென்னி தயாளுக்கு பெண் குழந்தை பிறந்தது... வைரலாகும் புகைப்படம்
பிரபல பாடகரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களுள் ஒருவருமான பென்னி தயாள் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ள விடயம் குறித்து நெகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
இந்த நிகழ்ச்சிக்கென தனித்துவமான ரசிகர் கூட்டமும் மக்களின் பேராதரவும் காணப்படுகின்றது.

அதில் பங்குபற்றிய பல போட்டியாளர்கள் தங்களது திறமையை காட்டி இப்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக அசத்திவருகின்றனர்.
இந்நிகழ்சியின் நடுவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனவர் தான் பாடகர் பென்னி தயாள். சினிமாவில் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார் என்றால் மிகையாகாது.

தமிழ் சினிமாவில் பாபா படத்தில் இடம்பெற்ற மாயா மாயா.. பாடல் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இவர் கடந்த 2016ம் ஆண்டு நியூயார்க்கில் வசித்து வந்த கேத்ரின் பிலிப் என்கிற மாடல் அழகியை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து பென்னி மற்றும் கேத்ரின் தம்பதியினர் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார்கள்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 27ஆம் திகதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவலை பென்னி தயாள் குழந்தை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவுக்கு லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |