இனி சாவது தான் ஒரே வழி.. கதறிய அழுத மீரா மிதுன் - பதறிய நெட்டிசன்கள்
பிரபல மாடல் நடிகையான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர், இவர் எப்பொழுதும் சர்ச்சைக்கு பெயர் போனவராக திகழ்ந்துவருகிறார்.
சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட மீரா மிதுன், பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி உள்ளிட்ட அனைவரையும் இழிவாக பேசியதாலும், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ காட்சியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
கண்ணீர் விட்ட மீரா மிதுன்
பின் மீரா மிதுன் 6 மாதங்களாக நீதிமன்றத்துக்கு அலைந்து திரிவதால் வருமானமே இல்லாமல், சாப்பாட்டுக்கு வழி இல்லை என வேதனை தெரிவித்து இருந்தார்.
மேலும், தன் வளர்ச்சியை யாருக்கும் பிடிக்கவில்லை, தெருவில் போறவர்கள் தன்னை தவறாக பேசுவதால், வீட்டில் தன்னை சேர்த்து கொள்ள மறுக்கிறார்கள்.
தான் இறந்தால் மட்டுமே இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் தான் செய்த சாதனைகள் தெரிய வரும் என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இவரைக்கண்டு சிலர் வருத்தப்பட்டாலும் நெட்டிசன்கள் வழக்கம்போல் ட்ரோல் செய்து வருகின்றனர்.