தனக்கு பிடித்த மீன்குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்ற சுனிதா வில்லியம்ஸ்....வைரலாகும் வீடியோ
சுனிதா வில்லியம்ஸ் சமோசாவுக்கு பதிலாக மீன்குழம்பை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனால் தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை சுனிதா பெற முடியும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஒரு பெண்ணாவார். இவர் விண்வெளியில் விண்மீன்களை தான் பார்க்க முடியும் என்றில்லை மீன் குழம்பு கூட சாப்பிட முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.
இவர் விணிவெளிக்கு சென்றவுடன் அங்கே நடனமாடிய வீடியோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விண்வெளிக்கு செல்வதற்கு முன்பு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுனிதா, தனக்கு பிடித்த இந்திய உணவான சமோசாவை எடுத்து செல்ல உள்ளதாக கூறினார்.
மேலும், தன்னுடன் சிறிய விநாயகர் சிலையையும் எடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார். சுனிதா தன்னுடன் இந்திய உணவுகளில் ஒன்றான மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமோசாவுக்கு பதிலாக இந்த உணவை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனால் தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை சுனிதா பெற முடியும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
Take a tour of #Starliner! We're streaming live from the @Space_Station with @NASA_Astronauts Butch Wilmore and Suni Williams: https://t.co/9Ez21vdkFQ
— NASA (@NASA) June 8, 2024