Housemats-ஐ பிரித்து மேய்ந்த சுனிதா.. உள்ள வந்ததும் சூடுபிடிக்கும் ஆட்டம்- இனியாவது எகிறுமா TRP?
பிக்பாஸ் வீட்டின் ஆட்டத்தை சுனிதா மற்றும் தர்ஷினி ஆகிய இருவரும் மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளார்.
பிக்பாஸ் 8
பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு வித்தியாசமான டாஸ்க்களை பிக்பாஸ் கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் உள்ள 2 பேர் வெளியேற்றப்பட்டு புதிதாக 2 பேர் ரீபிளேஸ் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்து வந்தன. இதனால் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்டான போட்டியாளர்களில் யார் வந்தால் நன்றாக இருக்கும் யார் வரக்கூடாது என்பது குறித்த விளையாட்டும் நடத்தப்பட்டது.
அதில், பலரும் வர்ஷினி உள்ளே வந்தால் நன்றாக இருக்கும். அத்துடன் சில போட்டியாளர்கள் உள்ளே வரவே கூடாது என்றும் தீர்மானித்தார்கள்.
உள்ளே வந்தவுடன் வேலையை காட்டிய சுனிதா
இந்த நிலையில், இன்றைய தினம் சுனிதா, வர்ஷினி, அர்ணவ் உட்பட மொத்தமாக 8 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளனர். இவர்களில் உள்ளே வந்த சுனிதா மற்றும் வர்ஷினி இருவரும் இதுவரையில் பார்க்காத ஒரு டுவிஸ்ட்டை கொண்டு வந்துள்ளனர்.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரை உள்ளே வந்த பழைய போட்டியாளர்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே சுனிதாவிற்கும் ஜாக்குலினுக்கும் ஏழாம் பொருத்தமாக தான் இருந்தது. இதனால் உள்ளே வரக் கூடாது என ஜாக்குலின் கூறியிருந்தார்.
டாஸ்க்கிலும் சுனிதா உள்ளே வந்தால் பாஸ் போன்று இருப்பார். இதனால் அவர் உள்ளே வரக் கூடாது என கூறினார்கள். ஆனாலும் பிக்பாஸ் ஆட்டத்தை சூடுபிடிக்கும் வகையில் அவரையும் உள்ளே அனுப்பியிருக்கிறார்.
சுனிதா வந்தவுடன் தன்னை எதிர்த்தவர்களை வச்சி செய்ய ஆரம்பித்து விட்டார். இனி வரும் நாட்கள் உள்ளே இருப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதனை தொடர்ந்து எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |