‘குக் வித் கோமாளி’ சுனிதா வாங்கிய சொகுசு கார் : விலையை கேட்டு வாயடைத்த நெட்டிசன்கள்!
‘குக் வித் கோமாளி’ சுனிதா வாங்கிய சொகுசு காரின் விலை குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுனிதா கோகோய்
பிரபல விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்றனர், நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்ஷன் தொடர்கிறார். போட்டியாளர்களாக 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். புகழ், குரேசி, சுனிதா, தங்கதுரை உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர்தான் சுனிதா கோகோய். இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் செய்யும் கோமாளித்தனமாக விஷயங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் ஆரம்ப காலக்கட்டத்தில், ஜோடி நம்பர் 1 உட்பட பல நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் திறமையை காட்டியுள்ளார். இதனையடுத்து இவருக்கு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
காரின் விலை மதிப்பு
இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ புகழ் சுனிதா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், கோகோய் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த Luxury Hybrid சொகுசு காரின் விலை 60 லட்சம் என்று கூறப்படுகிறது.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் சுனிதாவை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |