அம்மாவான பின்னரும் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் நடிகை ! வைரலாகும் புதிய புகைப்படங்கள்
சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் மாஸான ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கேப்ரியல்லா செல்லஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து இல்லத்தரசிகளின் மனங்களில் நீக்காத இடத்தை பிடித்தவர் தான் கேப்ரியல்லா.

இந்த தொடர் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கடந்த 2024ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
டிஆர்பியில் எப்போதும் டாப்பில் இருந்துவந்த இந்த சீரியல் 1144 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.

சாதிப்பதற்கு நிறம் முக்கியமல்ல திறமை இருந்தால் திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் விரும்பிய துறையில் சாதிககாலாம் என்பதை நிரூபித்துக்காட்டினார்.
அதனை தொடர்ந்து டிக் டாக்கில் காணொளிகளை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த கேப்ரியல்லாவுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஐரா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா உடன் முதன்முதலில் நடித்த கேப்ரியல்லா, பின்னர் ரஜினியின் கபாலி, லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய சுந்தரி சீரியலில் கேப்ரியல்லாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அவருக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்தது.

இந்த சீரியலின் பின்னர் கணவருடன் சொந்த ஊறில் செட்டில் ஆகிய கேப்ரியல்லாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒரு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் அம்மாவான பின்னரும் செம மாஸ் காட்டும் கேப்ரியல்லா தற்போது ட்ரெண்டிங் உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |