நடிகை குஷ்பு வீட்டில் அரங்கேறிய விசேஷம்.. அது என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
கொரோனா வைரஸால் பல திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வரும் நேரத்தில், நடிகர் மற்றும் இயக்குனருமான சுந்தர்.சி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன அவர் நேராக வீட்டிற்கு வராமல் கெஸ்ட் ஹவுஸில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு சுந்தர் சி. வீடு திரும்பிவிட்டார். இதுகுறித்து, ட்விட்டர் பதிவு செய்த மனைவி நடிகை குஷ்பு, என் கணவர் வீடு திரும்பிவிட்டார்.
என் குழந்தைகளுக்கு அவர்களின் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார். என் மாமியாருக்கு அவரின் மகன் கோவிடில் இருந்து மீண்டு வந்துவிட்டார்.
ஆனால் நான் அனைவரின் குடும்பத்தாரும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். நெகட்டிவிட்டியை தூரம் வைத்துவிட்டு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என தெரிவித்துள்ளார். இதனால் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
My husband is back home, finally. To my kids, Appa is back home. To my ma in law, her son is back post #Covid. But I want everyone’s someone to be back home, hale n hearty. We need to fight this out n we will. Pls keep negativity at bay n hope n pray for a healthy country.. ????
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 24, 2021