15 நிமிடத்தில் காரசாரமான சுண்டல் மசாலா - செய்வது எப்படி?
மாலை நேரத்தில் பலரும் சூடான் சுவையான பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.
அதேப்போல் சுண்டல் மசாலாவையும் விரும்பி சாப்பிடாதவர்களே இருக்க முடியாது.
அந்த வகையில் ஒரு சுவையான சுண்டால் மசாலாவை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை பட்டாணி – கால் கிலோ, வெங்காயம் – 5, தக்காளி – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன், தனி மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, பூண்டு – 4 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை விளக்கம்
முதலில் பட்டாணியை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும், அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 8 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
அதன் பிறகு அதனை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து,, நான்கு அல்லது ஐந்து விசில் வைத்து வேக வைக்க வேண்டும்.
இத்தோடு, நான்கு வெங்காயத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதே போல் நான்கு தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, இஞ்சி மற்றும் பூண்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
இதில், ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காய விழுதை சேர்த்து, நன்கு வதக்கி பின் தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிட விட வேண்டும். வேக வைத்த பட்டாணியில், தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும்.
இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பட்டாணியுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொத்தமல்லித்தழையை சேர்த்து கிளறி விட வேண்டும். அவ்வளவு தான் இப்போது சுவையான சுண்டல் மசாலா ரெடி!