குட் நியூஸ் சொன்ன கோலிசோடா பட நடிகர்-பொங்கல் ஸ்பெஷல் தினத்தில் வெளியான பதிவு
பொங்கல் தினத்தில் கோலிசோடா பட நடிகர் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
கிஷோர்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பசங்க.
இதில் குழந்தை நட்சத்திரமாக அன்புக்கரசி என்ற கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகர் கிஷோர்.
முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் அடுத்து கோலி சோடா படத்திலும் நடித்தார், ஆனால் அதன்பின் அவருக்கு சரியான படங்கள் கிடைக்கவில்லை.
திருமணம்
இந்த நிலையில் கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இருவரும் பொங்கல் தினத்தில் ஒரு ஸ்பெஷல் விஷயத்தை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது ப்ரீத்தி குமார்- கிஷோர் இருவரும் கர்ப்பமாக உள்ளார்களாம். அவர்கள் புகைப்படத்துடன் சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த செய்தியை பார்த்த பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |