ராசி மாறிய சூரியன்... தன யோகத்தை கொண்டாடவுள்ள ராசிக்காரர்கள்: சூரியன் கொடுக்கும் பொற் காலம் இது
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம்.
இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்த வகையில் நவக்கிரகங்களின் தலைமை கிரகமாக விளங்கும் சூர்ய பகவான் ஆகஸ்ட் 17ஆம் திகதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இவரின் இந்தப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறவிருக்கிறார்கள். அப்படி நல்ல பலன்களை பெறவிருக்கும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதைப் பார்ப்போம்.
மேஷ ராசி
சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்தக் காலக்கட்டத்தில் நல்ல செய்திகள் வந்து சேர்ந்துக் கொண்டே இருக்கும். உங்கள் கடின உழைப்பால் பல சாதகமான பலன்கள் வந்து சேரும். உங்களின் புத்திசாலித்தனமும் ஆற்றலும் அதிகரிக்கும். நீங்கள் பணி புரியும் இடத்தில் நல்ல மதிப்பு மரியாதை பெறுவீர்கள். சூரிய பகவானால் உங்களின் வருமானம் அதிகரித்துக் கொண்டிருக்கும்.
சிம்ம ராசி
சொந்த ராசியான சிம்ம ராசியில் சூரிய பகவான் இடம் மாறியிருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு எல்லா விடயங்களிலும் நன்மையும், நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்களுக்கு சகல பாக்கியங்களும் அதிகரிக்கும். இத்தனைக் காலமும் தடைப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் எல்லாம் சிறப்பாக நடக்கும். திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டி பதவி உயர்வுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு பண பலன் அதிகரிக்கும், நினைத்த காரியம் கைகூடி வரும் வருமானம் அதிகரிக்கும், சகல பாக்கியமும் கிடைக்கும். தொழில் தொடர்பில் உயர்வு கிடைக்கும். கௌரவம், மரியாதை எல்லாம் தேடி வரும். திருமண பேச்சுக்கள் கைகூடும். கடினமாக உழைப்பவர்களுக்கு மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |