கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி: செப்டம்பர் 17 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!
நவகிரகங்களில் சூரியபகவான் கிரகங்களின் அதிபதியாகக் கருதப்படுவதால், அவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதிகாரம், வலிமை மற்றும் ஆற்றலின் அதிபதியான சூரியன், 2026 செப்டம்பர் 17-ஆம் தேதி புதனால் ஆளப்படும் கன்னி ராசியில் பெயர்ச்சி அடைந்து, அக்டோபர் 17-ஆம் தேதி வரை அங்கு நீடிப்பார்.

சுமார் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் சூரியனின் இந்தப் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்ம் என்றாலும் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி சூரிய பகவான் ஆசியால் தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

இந்த பெயர்ச்சியின் போது சூரியன் மிதுன ராசியின் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். இந்த கிரக மாற்றத்தால் பணியிடத்தில் நிலவிய சிக்கல்கள் முடிவுக்கு வரும்
வேலை தேடுபவர்களுக்குப் சரியான வேலைவாய்ப்புகள் அமையலாம். இந்த காலகட்டத்தில் படிப்பு விஷயங்களில் இருந்த தடைகள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள். வேலையில் அவர்களின் செயல்திறன் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும். அவர்களின் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும்.
இந்தக் காலகட்டத்தில் பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உறவுகளில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
கன்னி

கன்னி ராசியின் முதல் வீட்டிற்குள் இப்போது சூரியன் நுழையப்போகிறார். இந்த காலகட்டத்தில், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றி காத்திருக்கின்றது.
குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும், மேலும் நிதி நிலைமை கணிசமாக மேம்படும். மற்றவர்களுக்கு கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்
வாழ்க்கைத்துணையுடனான உறவு மகிழ்ச்சியானதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு, மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும்.. இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்

சூரியன் விருச்சிக ராசியின் பதினொன்றாம் வீட்டிற்குள் நுழையப்போகிறார். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் வாழ்க்கையில் இருந்த பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையும்.
கும்பம்

கும்ப ராசியின் எட்டாவது வீட்டிற்குள் சூரியன் நுழையப்போகிறார். இந்த வீடு நிதி வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நன்மை பயக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் பல வருமான ஆதாரங்களுக்கான வாய்ப்புகளை அனுபவிக்கலாம்.சக ஊழியர்களின் ஆதரவும், மகிழ்ச்சியான பணிச்சூழலும் உற்பத்தித்திறனையும், திருப்தியையும் அதிகரிக்கும்.
சொத்து அல்லது வாகனங்களை வாங்குவதற்கு இந்த காலம் சிறந்தது, மேலும் தொழில் வல்லுநர்கள் தங்கள் தொழிலில் சீரான முன்னேற்றத்தை பெறுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |