சூரியப் பெயர்ச்சியால் பாதிப்பு: அடுத்த ஒரு மாதம் இந்த ராசிகளுக்குச் சோதனைக் காலம்!
Sun Transit on November 16: ஜோதிடத்தின்படி, நவகிரகங்களின் தலைவனாகக் கருதப்படுபவர் சூரியன். இவர் மாதந்தோறும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார்.
சூரியனின் ஒவ்வொரு ராசி மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

தற்போது துலாம் ராசியில் பயணித்து வரும் சூரியன், நவம்பர் 16 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். செவ்வாய் அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியில் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி வரை சஞ்சரிக்கவுள்ளார்.
இந்த சூரியப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக, மூன்று ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இவர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு எந்தவொரு முடிவையும் அவசரப்படாமல், கவனமாக எடுப்பது நல்லது. அப்படி, விருச்சிக ராசிக்கு சூரியன் செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் 6ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வேலையில் சில தடைகளைச் சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்து, மற்றவர்கள் கூறுவதை உடனே நம்பாமல் கவனமாக இருக்க வேண்டும்.
உடல்நலத்தில், குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். குடும்பத்தினரிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் பேச்சால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசியின் 2ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கோபமான வார்த்தைகள் உறவுகளைப் பாதிக்கலாம். நிதி விஷயங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக முதலீடுகளில் கவனம் தேவை. வியாபாரிகள் பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் அதன் நிபந்தனைகளை முழுமையாகப் படித்துப் பார்த்து பின்னர் கையெழுத்திட வேண்டும்.
தனுசு

தனுசு ராசியின் 12ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அடுத்த ஒரு மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும்.
ஒவ்வொரு முடிவையும் நிதானமாக எடுக்க வேண்டும். வேலை மற்றும் வியாபாரத்தில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வெளிநாட்டுத் தொடர்புடைய வணிகத்தில் ஈடுபடுபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
பணப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கை அவசியம். நன்கு சிந்திக்காமல் பெரிய முதலீடுகளைச் செய்வதைத் தவிர்ப்பதால் பெரிய பண இழப்புகளை தவிர்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |