சூரிய பெயர்ச்சி: நவம்பர் மாதத்தில் ராஜயோகத்தினை பெறும் 3 ராசியினர்
சூரிய பெயர்ச்சியால் நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டத்தினை பெறும் மூன்று ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சூரிய பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவராக இருக்கும் சூரியன், ஆன்மா, நம்பிக்கை, ஆற்றல், கௌரவம் இவற்றிற்கு முக்கிய காரணியாக இருக்கின்றார்.
சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றிக் கொள்கின்றார். இதனல் 12 ராசியினருக்கு தாக்கம் ஏற்படுவதுடன், நவம்பர் மாதமட் 16ம் தேதி துலாம் ராசியலிருந்து விருச்சிக ராசிக்கு நுழைகின்றார்.
சூரிய பெயர்ச்சியானது நவம்பர் 16ம் தேதி ஆரம்பித்து டிசம்பர் 16ம் தேதி வரை இருக்கின்றார். சூரியனின் இந்த பெயர்சியால் சில ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்டுகின்றது. அந்த வகையில் அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் 7வது வீட்டில் சூரியன் லெ்லும் நிலையில், வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைந்து நல்ல மாற்றங்கள் ஏற்படுமாம்.
கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான பலன் கிடைப்பதுடன், பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்குமாம்.
கடின உழைப்பிற்கான பலன் கிடைப்பதுடன், ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றியும் கிடைக்குமாம். புதிய வருமான வழிகளும் உருவாவதுடன், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாகவே இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியினரின் 6வது வீட்டில் சூரியன் உள்ள நிலையில், மங்களகரமானதாக இருப்பதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்பு கிடைக்குமாம்.
தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தினையும், புதிய ஒப்பந்தத்தையும் பெறும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் அதிகளவில் லாபம் கிடைக்குமாம். புதிய வருமான ஆதாரங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியினருக்கு 11 வது வீட்டில் சூரிய பெயர்ச்சியாகும் நிலையில், அதிஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைப்பதுடன், நீண்ட கால ஆசைகள் இந்த காலத்தில் நிறைவேறுமாம்.
சமூகத்தில் அந்தஸ்து, திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், நீண்ட கால கடின உழைப்பிற்கான பலனும் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபமும், புதிய ஒப்பந்தமும் கிடைக்குமாம். உறவுகளும் சிறப்பாக இருக்குமாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |