ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது சூரியன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்த மாதம் அடுத்ததாக சூரியன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார்.
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் இருப்பதால் சூரியன்- குரு பகவான் இருவரும் ஒரே ராசியில் பயணிப்பார்கள். இதன் விளைவாக குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் உருவாகும்.
அப்படியாயின் 12 ராசிகளில் அதிர்ஷ்டம் ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
உற்சாகமான நாளாக இருக்கும்.
வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வரும்.
ரிஷபம் ராசி
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். .
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகாவிஷ்ணுவை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.
கடகம் ராசி
தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.
சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடுகள் அதிகரிக்கலாம்.
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம் ராசி
தேவையான பணம் கையில் இருக்கும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
துர்கை வழிபாடு நல்லது.
கன்னி ராசி
தந்தைவழி உறவுகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
புதிய முயற்சிகள் செய்து வேலை செய்ய வாய்ப்பு வரும்.
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
இன்று மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.
துலாம் ராசி
மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).