கடகத்தில் சூரிய பெயர்ச்சி.... அதிர்ஷ்ட மழையில் நனையும் 4 ராசியினர்
கடகத்தில் சூரியன் பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில் அடுத்தடுத்து அதிர்ஷ்டத்தினை பெறும் நான்கு ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி என்பது பல மாற்றங்களை கொண்டுவருவதுடன், இதனை முக்கியமாக பார்க்கப்படுகின்றது. வரும் ஜுலை 16ம் தேதி சூரியன் கடக ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார்.
இவை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சில ராசியினர் வாழ்வில் பணம், பதவி, புகழ் என ஒன்றாக வந்து சேருமாம்.
சூரியன் மற்றும் சந்திரனுக்கும் இடையிலான உறவு சாதகமாக இருப்பதால் நேர்மறை மாற்றங்களை கொண்டு வருகின்றது. அவ்வாறு எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

சிம்மம்
சிம்மா ராசியின் அதிபதியாக சூரியன் இருப்பதால், இந்த காலத்தில் பண வரவு அதிகமாவதுடன், நிதி விவகாரங்களில் முன்னேற்றமும் ஏற்படுகின்றது.
கைக்கு வராமல் இருந்த பணத்தை மீட்டெடுப்பீர்கள். நிலுவையில் இருந்த பணிகளும் வெற்றிகரமாக முடிவடையும். அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவதுடன், சக ஊழியர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிய ராசியில் சூரிய பெயர்ச்சியினால் இந்த காலக்கட்டம் லாபமாக அமையுமாம். முன்பு செய்த முதலீடுகளால் தற்போது லாபம் கிடைப்பதுடன், தேங்கியிருந்த பணிகள் அனைத்தும் வேகமாக முடியும்.
முக்கிய திட்டங்களை எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் கிடைப்பதுடன், முந்தைய நிலையை விட நிதி நிலைமை மேன்மை கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியினர் இந்த சூரிய பெயர்ச்சியினால் அதிக நன்மைகளை அளிக்கும். நீண்ட காலமாக இருந்த குடும்ப பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரும்.
மன அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், பணிச்சுமையும் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி காணப்படும்.
நீண்ட நாட்களாக வேலையில் மாற்றத்தினை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். பணவரவு அதிகமாகும். நிதி நிலையும் வலுவடைகின்றது.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வெற்றிகள் குவிவதுடன், கல்வி, குழந்தைகள், காதல் உறவுகள் மற்றும் தொழிலில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள்.
சமூகத்தில் அந்தஸ்து உயர்வதுடன், நற்பெயரும் கிடைக்கும். மாணவர்கள் எழுதும் போட்டித்தேர்வில் நல்ல முடிவு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சி சாதகமாக கிடைக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |