சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!
ஜோதிட சாத்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் அரசனாக சூரியன் கருதப்படுகிறார். அவர் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார்.
தற்போது ரிஷப ராசியில் பயணிக்கும் சூரியன், ஜூன் 15 அன்று மிதுன ராசிக்குள் நுழைகிறார். மிதுனத்தின் அதிபதி புதன் ஏற்கனவே அங்கே இருப்பதால், புதன் சொந்த ராசியில் இருந்து பத்ரா ராஜயோகம் உருவாகிறது.

அதேசமயம் சூரியன்–புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது. ஒரே ராசியில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகுவது ஜோதிட ரீதியில் மிகுந்த சிறப்பு மிக்க விடயமாக பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பை காட்டினாலும், தொழில், மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ர ராஜயோகங்கள் உருவாகுவதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பணியிடத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். உங்கள் முடிவெடுக்கும் திறனும், பேச்சுத் திறனும் மேம்பட்டு இருப்பதால், சுற்றியுள்ளவர்களின் கவனத்தையும் பாராட்டையும் பெறும் நிலை உருவாகும்.
சிம்மம்

சிம்ம ராசியின் 11-ஆம் வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ர ராஜயோகங்கள் உருவாகுவதால், இந்த ராசிக்காரர்களின் நிதிநிலை வலுவடையும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான பதவிகள் கிடைக்கலாம்.
தொழிலதிபர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் அமைய வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும்.
கன்னி

கன்னி ராசியின் 10-ஆம் வீட்டில் புதாதித்ய மற்றும் பத்ர ராஜயோகங்கள் உருவாகுவதால், பணியிடத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டப்படும்.
நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
பரம்பரைச் சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் ஏற்படும். குடும்பத் தொழில் செய்து வருபவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |