அனுஷம் நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சாரம்: இனி இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்!
sun transit in anusha nakshatra : நவகிரகங்களின் தலைவனாக அறியப்படும் சூரியபகவானின் இயக்கத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ஜோதிடத்தின்படி, சூரியன் அங்கீகாரம், தலைமைத்துவம், ஆற்றல் மற்றும் தனித்துவமான அடையாளம் ஆகியவற்றைக் குறிக்கிறார்.

சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார்.
அந்த வகையில், நவம்பர் 20ஆம் தேதி சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் விளங்குகிறார்.சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்க இருப்பது ஜோதிட ரீதியாக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த நட்சத்திர மாற்றத்தால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கம் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசியினர் சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.அப்படி தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உச்சகட்ட அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரப்போகிறது. நிதி நிலை மேம்பட்டு, பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
புதிய வருமான வழிகள் உருவாகும். திருமணமாகாதவர்களுக்குப் பொருத்தமான வரன்கள் அமையலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
குழந்தைகளின் முன்னேற்றமும், சாதனைகளும் மகிழ்ச்சி அளிக்கும். மேலும், எதிர்பாராத பணவரவு மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கலாம். ஒட்டுமொத்தமாக இந்தக் காலம் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.
சிம்மம்

சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். புதிய தொழில் கூட்டணிகள் அமைவதுடன், சமூக நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
இதனால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கல்வி மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மன உறுதி அதிகரித்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துக்கொள்வீர்கள்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் அமையும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் யோகமும் உண்டு. இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி திடீர் பணவரவையும், தொழிலில் எதிர்ப்பாராத முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நினைத்த இலக்குகளை அடைவதற்கான சூழல் தானாகவே உருவாகும்.
புதிய வருமான வழிகள் திறப்பதுடன், மன உறுதியும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பணத்தைச் சேமிக்கும் வாய்ப்புகளும் அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |