3 முறை நடக்கும் அரிய சூரிய பெயர்ச்சி! ராஜ யோகத்தை அனுபவிக்ப்போகும் ராசியினர்
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில், அனைத்து கிரகங்களுக்கு அதிபதியாக விளங்கும் சூரியனின் பெயர்ச்சிக்கு சாஸ்திரங்களின் அடிப்படையில் அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகின்றது.

பிப்ரவரி மாதத்தில் சூரியன் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக, பிப்ரவரி 06 திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
பின்னர் பிப்ரவரி 13 ஆம் திகதி சூரியன் மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியடையவுள்ளார். அதன் பினபு பிப்ரவரி 19 ஆம் திகதி சூரியன் சதயம் நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சியடையவுள்ளார்.
அவ்வாறு ஒரே மாதத்தில் சூரியன் நிகழ்த்தும் மூன்று அரிய பெயர்ச்சியால் 12 ராசிகளிளுக்கும் சில சாதக, பாதக தாக்கம் இருந்தாலும், இதனால் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு

பிப்ரவரியில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சியால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத வகையில் பொருளாதார உயர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் இருப்பவர்கள் நால்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் எதிர்பாராத அளவில் வகையில் முன்னைய முதலீடுகளில் இருந்தும் பணம் வருவதற்கான வாய்ப்பு காணப்படும்.
அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்

இந்த அரிய சூரிய பெயர்ச்சியால் சூரினின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்த சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். குறிப்பாக வருமானத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
பல புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த குடும்ப பிரச்சிகைகளுக்கு மகிழச்சிகரமாக முடிவு கிடைக்கும்.
புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார அளவுக்கு உயர் சம்பளத்தில் மனதுக்கு பிடித்த வேலை கிடைக்கும். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி பணத்துக்கு பஞ்சமற்ற நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும்.
மேஷம்

குறித்த சூரிய பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வாழ்வில் பெரும் அதிஷ்டம் உண்டாகும். தொழில், காதல், திருமண வாழ்கை, ரத்த உறவுகள் என அனைராலும் மகிழ்ச்சி கிடைக்கும்.
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நல்ல பணவரவு கிடைக்கும். கடன் பிரச்சினைகளுக்கு முடிவுகட்டுவீர்கள். உயர் பதவில் அமரக்கூடிய யோகம் காணப்படுகின்றது.
தொழிலில் உயர் ஸ்தானத்தை கொடுக்கும் சூரிய பகவானின் ஆசியால் தலைமைத்துவ பண்புகள் மேலோங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். இவர்களுக்கு அடுத்த மாதம் பொற்காலமாக அமையப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |