சனி-ராகு சேர்க்கை: மார்ச் 14 முதல் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் தற்போது சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 14 ஆம் தேதி சூரியன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே ராகு பயணித்து வருகிறார்.
ராகுவும், சூரியனும் எதிரி கிரகங்களாகும். இந்த இரு கிரகங்களின் கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசியினைப் பொறுத்த வரையில் 11வது வீட்டில் சூரியன் மற்றும் ராகு கிரகங்களின் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் ரிஷப ராசியினரின் லட்சியங்கள் நிறைவேறும். வேலையில் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள். கடின உழைப்பிற்கான பலன் கிடைப்பதுடன், வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
கன்னி
சூரியன் ராகு சேர்க்கை கன்னி ராசியில் 7வது வீட்டில் நிகழவுள்ள நிலையில், சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். புதிய வருமான ஆதாயங்கள் கிடைப்பதுடன், சேமிப்பு அதிகரிக்கும். பணம் தொடர்பான பிரச்சினையும் தீரும். பணியிடத்தில் பாராட்டும், மாணவர்கள் போட்டித் தேர்வில் நல்ல மதிப்பெண்களையும் பெறுவார்கள்.
மகரம்
சூரியன் ராகு சேர்க்கை மகர ராசியின் 3வது வீட்டில் நடைபெற உள்ளதால், கடின உழைப்பிற்கான பலன் தற்போது கிடைப்பதுடன், நிதி ரீதியான ஆதாயங்கள், புதிய வருமானம் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைப்பதுடன், குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும் வாய்ப்பு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |