ஜெயிலர் 2ல் நடித்தது ரஜினியின் டூப் என பரவிய வதந்தி... சன் பிக்சர்ஸ் கொடுத்த தெறி பதில்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் தயாராகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை தான் இசையமைத்திருக்கின்றார்.
இன்னும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பை பிரமோ வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் உறுதி செய்திருந்தது.
டூப் என பரவிய வதந்தி
சில தினங்களுக்கு முன்னர் வெளியான அந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகளில் சிலர், அதில் ரஜினி நடிக்கவில்லை டூப் பயன்படுத்தி ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர் என ட்ரோல் செய்து வந்தனர்.
ரஜினி ஒரே ஒரு காட்சியில் இறுதியில் மட்டும் வந்து நடித்து இருக்கிறார் என்றும் விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கும் வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு தக்க பதிலடியை கொடுத்திருக்கின்றது.
ரஜினி தான் மொத்த காட்சிகளிலும் நடித்தார் என்பதை காட்டும் வகையில் அந்த வீடியோ முழுமையாக வெளியிட்டப்பட்டுள்ளது.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் இணையத்தில் புதிய புயலை கிளப்பி இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |