ஜூலை 16 உருவாகும் பரிவர்த்தன யோகம்: இந்த ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போவது உறுதி!
ஜோதிடத்தின் படி, ஜூலை மாதம் மிகவும் சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல்வேறு யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்
அந்த வகையில், ஜூலை 16 மிகவும் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அன்று சூரியனும் சந்திரனும் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. சூரியன் கடக ராசிக்கும், சந்திரன் சிம்ம ராசிக்கும் பெயர்வதால், ராசி பரிவர்த்தன யோகம் உருவாகிறது.

இது கிரகங்களின் தனித்துவமான நிலைமையால் உருவாகும் சிறப்பு யோகமாகக் கருதப்படுகிறது. இந்த பரிவர்த்தன யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளி்ன வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும், தொழில் மற்றும், பொருளாதார ரீதியில் உச்சகட்ட பலனை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?
மேஷம்

சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டம் உருவாக உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முன்னேற்ற வாய்ப்புகள் இப்போது கைகூடும்.
குறிப்பாக கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்றவர்கள் தங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நல்ல முடிவுகளைப் பெறும் வாய்ப்பு அதிகம். தொழில் புரிவோருக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
புதிய தொழில் அல்லது வியாபாரத்தை தொடங்க நினைப்பவர்கள் இந்த நேரத்தில் தைரியமாக முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். பணியிடத்திலும் புதிய பொறுப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
கடகம்

சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பல மாற்றங்களை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை மற்றும் செயல்திறன் அதிகரிப்பதால் எந்த காரியத்தையும் உற்சாகமாக செய்து முடிக்க முடியும்.
இதுவரை எடுத்த கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தொடங்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் அதிகரிக்கும்.மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து, உறவினர்களின், குறிப்பாக உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.மனதில் தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.
துலாம்

[AA8SF2K ]
சூரியன்–சந்திரன் பரிவர்த்தன யோகத்தின் அருளால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட காலமாக மேற்கொண்ட உழைப்புக்கான அங்கீகாரமும் பலனும் இந்த காலத்தில் கிடைக்கக்கூடும். பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
வேலைப்பளு குறைவதால் மன அழுத்தமும் குறைந்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். போட்டித் தேர்வுகள் மற்றும் போட்டி சார்ந்த முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |