சூரியன் - செவ்வாய் கிரக மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம்!
Sun and Mars Create a Rare Rajayoga: ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவராகக் கருதப்படும் சூரியன், நவம்பர் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இதன் மூலம் அவரது பலவீனமான நிலை முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், சூரியனின் ஆட்சி வீடான சிம்மத்தில் இருப்பதால், சூரியனும் செவ்வாயும் தங்களது வீடுகளைப் பரிமாறிக்கொள்ளும் ‘ராசி பரிவர்த்தன யோகம்’ உருவாகியுள்ளது.

இந்த அரிய கிரக அமைப்பு டிசம்பர் 16, 2026 வரை நீடிக்கும். ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், தொழில் மற்றும் வியாபார ரீதியாகவும் சாதகமான பலன்களை கொடுக்கப்போகின்றது.
குறிப்பாக, எதிர்பாராத பணவரவு, தொழில் முன்னேற்றம், வியாபார வளர்ச்சி போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். இந்த கிரக மாற்றத்தால் அப்படிப்பட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன், செவ்வாயின் சேர்க்கை சாதகமான பலன்களைத் தரக்கூடும். ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதும், சூரியன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதும் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும், புதிய வருமான வாய்ப்புகளையும் உருவாக்கும்.
இதனால் பொருளாதார நிலை வலுப்பெறுவதுடன், நீண்டகால நிதிப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரலாம். புதிய திட்டங்கள் மற்றும் பொறுப்புகள் மூலம் நற்பெயர் அதிகரிக்கும். நீண்டகால ஆசைகள் பல நிறைவேற வாய்ப்புள்ளது.
திருமண வாழ்க்கையில் அன்பும், பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைக்கு ஆச்சரியப் பரிசுகளை வழங்கி மகிழ்விக்கலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கக்கூடும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். நிதி நிலை மேம்படுவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது.
தொழிலில் முன்னேற்றம், சமூக அந்தஸ்து, அதிகாரம் மற்றும் புகழ் அதிகரிக்கும். பரிவர்த்தனை யோகத்தின் காரணமாக தொழில் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய வாய்ப்புள்ளது.
தங்களின் திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி உயர் பதவிகளை அடையலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு செல்வமும் புகழும் தேடிவரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிப்பதுடன், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பெருகும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கை நிதி மற்றும் தொழில் ரீதியாகச் சிறப்பான முன்னேற்றங்களை கொடுக்கும்.
புதிய வருமான வாய்ப்புகள் உருவாவதுடன், வணிக நடவடிக்கைகளும் வேகமெடுத்து பொருளாதார நிலையை வலுப்படுத்தும்.
பல்வேறு முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் ஈட்டவும், சம்பள உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது.தொழிலில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய வியாபாரங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அமையும்.
சமூகத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் அதிகரிப்பதுடன், முக்கிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கலாம். இந்தக் காலகட்டம் முழுவதும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |