ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
சுக்கிரன் பெயர்ச்சி மாதத்திற்கு ஒருமுறை முறை இடம்பெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு பயணம் செய்தால். இந்த பெயர்ச்சிக்கு முன்னரே கேது கன்னி ராசியில் இருக்கிறார்.
சூரியன், கேது சேர்க்கையால் செப்டம்பர் மாதம் இறுதியில் சூரியன் ஹஸ்தம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். ஏற்கனவே ஹஸ்தம் நட்சத்திரத்தில் கேது இருப்பதால் இந்த சேர்க்கை அபூர்வ சேர்க்கையாக பார்க்கப்படுகின்றது.
ஒரு நட்சத்திரத்தில் இரண்டு கிரகங்களின் பயணம் 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படும். அப்படியாயின் ராசிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
தாய்வழி உறவுகளிடம் இருந்து உதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் பணியாளர்களினால் பிரச்சினைகள் ஏற்படும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.
ரிஷபம் ராசி
நினைத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விநாயகரை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி
பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும்.
வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ப
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
சிலர் உங்களுக்கு எதிராக சில தொல்லைகள் தரலாம். இந்த காலப்பகுதியில் அது நீங்க வாய்ப்பு உள்ளது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்கள் விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம் ராசி
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தரும் அளவுக்கு வரவு இருக்கும்.
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்
லட்சுமி நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம் ராசி
எதிர்பார்த்த காரியங்கள் நல்லதாக அமையும்.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடை பெறும்.
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
நரசிம்மர் வழிபாடு நல்லது.
கன்னி ராசி
பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
இன்று மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.
துலாம் ராசி
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து வழக்கமான வேலைகளை பார்ப்பது சிறந்தது.
நீங்கள் செய்யும் காரியங்களில் துணிச்சலுடன் ஈடுபடுவீர்கள்.
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
வியாபாரம் செய்யும் இடங்களில் சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் அது நீங்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சிகம் ராசி
வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.
சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.
முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு ராசி
மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடுமை காட்டினாலும் பொறுமையாக இருப்பது அவசியம்.
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
மகரம் ராசி
மனதில் தைரியம் அதிகரிக்கும்.
கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும்.
கும்பம் ராசி
பிறருக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
சிவபெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம் ராசி
மனதில் தெய்வ பக்தி அதிகரிக்கும்.
மாலையில் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் கிடைத்து விடும்.
வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).