குரு-சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்... ஜாக்பாட் இந்த 3 ராசிகளுக்கு தான்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளிலும் பிரதிபளிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில்,வேத நாட்காட்டியின் அடிப்படையில் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஹோலி பண்டிகைக்கு பின்னர் சூரியன் மற்றும் குரு பகவானால் மிகவும் சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த அரிய ராஜ யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், உச்ச கட்ட அதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

குரு சூரியனால் உருவாகும் குறித்த நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் பல்வேறு வகையிலும் நல்ல திருப்பங்கள் ஏற்படவுள்ளது.
சூரியனின் ஆசியால் உயர் பதவிகள் தேடிவரும். குரு பகவானின் ஆசியால் பொன் பொருளை குவிப்பீர்கள். இந்த காலகட்டம் நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு ஏற்றம் உண்டாகும்.
தொழிலில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும்.பணியிடத்தின் மதிப்பும், மரியாதையும் உயரும்.
சிம்மம்

குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால், சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிகாரர்கள் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகின்றார்கள்.
இவர்களிள் ஆளுமைத்திறனில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இவர்களின் நீணட கால உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கப்போகின்றது. நிதி நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். இவர்களின் மனநிலையில் தெளிவு பிறக்கும். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். திடீர் பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்

குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது மீன ராசியினர் வாழ்வில் எதிர்ப்பார்ப்பை விட நல்ல பலன்களை கொடுக்கும். சூரியனின் நிலையால் உயர் பதிவியில் அமரும் யோகம் காணப்படுகின்றது.
புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்புகள் தானாகவே அமையும். குருவின் ஆசியால் பொருளாத நிலையில் உச்ச பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பரம்பரை சொத்துக்கள் கைக்குவரும் யோகம் காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |