வெயில் காலத்தில் வெங்காயத்தை கட்டாயம் எடுத்துக்கோங்க.... கண்கூடாக அதிசயத்தை உணர்வீங்க
வெயில் காலங்களில் வெங்காயத்தை நாம் கட்டாயமாக பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வெங்காயம்
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையும், பலனையும் கொடுக்கின்றது.
பல மருத்துவ குணங்களுக்கு வெங்காயம் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெயில் காலத்திலும் வெங்காயத்தை எடுத்துக் கொள்வது சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
நன்மைகள் என்ன?
வெங்காயம், மனிதர்களின் உணவுப் பழக்கத்தில் பழமையான ஒன்றாக இருந்து வருகின்றது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தி கொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர்.
ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது.
வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும், நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது.
ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும். இதே போன்று குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க, அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தோ அல்லது நெய்யில் வறுத்தோ கொடுக்கலாம்.
வெங்காயத்தில் உள்ள சல்பர், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, மாரடைப்பை தடுக்கிறது. இதன் அண்டிமைக்ரோபியல் தன்மை செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
பைட்டோகெமிக்கல்கள் அல்சரை தடுக்க, கரையும் நார் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
