சில தினங்களில் ஆரம்பமாகும் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு திடீர் பணமழை
ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியாக காணப்படும் சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைவதால் 3 ராசிக்காரர்களும் அதிர்ஷ்டம் கூரை பிய்த்து கொட்டப் போகின்றதாம்.
சுக்கிரன் பெயர்ச்சி
ஆடம்பர வாழ்க்கையின் அதிபதியாகவும், செல்வம் புகழையும் அள்ளிக் கொடுப்பவர் தான் சுக்கிரன். இன்னும் இரண்டு தினங்களில் சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைய இருக்கின்றார்.
ஆம் வரும் மார்ச் 12ம் தேதி 8.13 மணிக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. ஜோதிடத்தில் சுக்கிரன் என்பது வாழ்க்கையில் உடல் மகிழ்ச்சியின் அம்சமாக அறியப்படுகிறது.
சுக்கிரன் கிரகத்தின் தாக்கத்தால், ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையில் இன்பம், பொருள், ஆடம்பரம், பேர் புகழ் ஆகியவை பெறுகிறார்.
இயற்கையான பலன் தரும் கிரகம் என்பதால் பெரும்பாலும் சாதகமான பலன்களையே தருகிறது. எந்தெந்த ராசிக்காரர்கள் இதனால் நன்மை பெறுவார்கள் என்பதை இங்கு காணலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல பலனை தருவதுடன், இந்த நேரத்தில் பழைய முதலீடுகளிலிருந்து பயனடைவதோடு, புதிய வருவாய் வரும்.
நிதி ஆதாயம் உண்டாகும். எந்த பெரிய வர்த்தகத்தை சுக்கிரன் பெயர்ச்சிக்கு பின்பு உறுதி செய்யலாம். இது எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் நேரம் நல்லது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்கள் லக்ன வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இதனுடன், திருமணமான தம்பதிகள் தங்கள் துணையிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவதுடன், கூட்டு வேலைகளையும் தொங்கலாம்.
மறுபுறம், சுக்கிரன் உங்களுக்கு திடீர் பணவரவை கொடுக்கும். திருமணமாகாதவர்கள் திருமண தடை நீங்கும்.
தனுசு
தனுசு ராசிகாரர்களுக்கு சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால், சந்ததி, காதல்-உறவு மேம்படும்.
சிலருக்கு பந்தயம் மற்றும் லாட்டரியில் லாபம் கிடைக்கலாம். நேரம் சாதகமாக இருக்கிறது.
தொழில்முனைவோர் அதிக பணம் சம்பாதிப்பதில் வெற்றி காண்பர். பணியிடங்களில் பதவி உயர்வு பெறலாம்.